பிரதமர் மோடியின் அறிவிப்பு உன்னதமானது... ரூ.500 நோட்டு ஒழிப்பை வரவேற்கும் வேல்முருகன்

ரூ.500, 1000 நோட்டுக்களை அழிக்கும் பிரதமர் மோடியின் அறிவிப்பு உன்னதமானது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கதை இல்லாமல் செய்யவும் பிரதமர் மோடி எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்புக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Rs. 500, 1000 abolished: Velumurugan welcomes

நாட்டில் பெரும் பணமுதலைகளால் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதும் அன்னிய சக்திகளால் கள்ளநோட்டுகள் புழக்கத்தில்விடப்பட்டும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இந்த பகாசுர கொள்ளையர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் மரண அடி கொடுக்கும் வகையில்இனி நாட்டில் ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது.

இந்த அறிவிப்புடன் நின்றுவிடாமல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்ற உறுதிமொழியையையும் மத்திய பாரதிய ஜனதா அரசு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

அதே நேரத்தில் இத்தகைய சீரிய நடவடிக்கையை இன்னும் முறைப்படுத்தி அறிவித்திருந்தால்இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுமே இந்த மகத்தான திட்டத்துக்கு

வரவேற்பளித்திருப்பார்கள் என்பதுதான் யதார்த்தம். ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்ததால் நடுத்தர மக்களிடத்திலேயே பெரும் பீதியே ஏற்பட்டுவிட்டது.

இரவோடு இரவாக ஏடிஎம்களை முற்றுகையிட்டும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களையும்முற்றுகையிட்டும் பெரும் துயரைச் சந்திக்க நேர்ந்தது. இதே திட்டத்தை முன்னரே அறிவித்து குறிப்பிட்டதொகையை கையில் வைத்திருப்பவர்கள் இந்த கால கட்டத்துக்குள் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தால் மாபெரும் ஒரு மாற்றத்துக்கு மறுமலர்ச்சிக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை அளித்திருப்பார்கள்.

தற்போது திடீரென அறிவிக்கப்பட்டதால் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றுவதற்காகவே இடைத்தரகர் கும்பல்கள் முளைத்துவிட்டன. பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ரூ400க்கு பெட்ரோல்

நிரப்பிவிட்டு ரூ100ஐ கமிஷன் தொகையாக கொள்ளையடிக்கின்ற பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை சீரமைக்க வங்கிகள் நாளை திறக்கப்படுவது முதல் உடனுக்குடன் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி அரசு அறிவித்தது போல மாற்று ரூபாய் நோட்டுகளை எவ்வளவு விரைவாக வழங்க வேண்டுமோ அவ்வளவுவிரைவாக வழங்கினால்தான் தற்போதைய பதற்றமும் பீதியும் முடிவுக்கு வரும்.

ஆகையால் ரூ500, ரூ1,000 பணத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளையாவது மத்திய அரசுமுறைப்படுத்திட விரைவாக செயல்படுத்தட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+