தஞ்சையில் ரூ.7.65 கோடி பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
புதுக்கோட்டை சாலையில் ரூ.7.65 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 7.65 கோடி பணம், தேர்தல் பறக்கும் படையினரால் இன்று மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரினால் ரத்தான அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

இந்த நிலையில் தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதி வழியாக ஏ.டி.எம். வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணமின்றி ரூ 7.65 கோடி வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமானது எனவும் அந்த பணம் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications