நெல்லையில் ஒரே நாளில் ரூ.79 லட்சம் ரொக்கம், அதிமுக கரை வேட்டிகள் பறிமுதல்
நெல்லை: நெல்லையில் நேற்று ஒரே நாளில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிமுக கரை வேட்டிகளை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.79 லட்சம் சிக்கியது. இந்நிலையில் இரவு வடக்கு தாழையூத்தில் அருந்ததியர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக கரை வேட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாழையூத்து சப் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அங்கு சோதனை நடத்தியதில் அதிமுக கரை வேட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய கன்னையா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
அதிமுக பிரமுகர் ஒருவர் இந்த வேட்டி பண்டலை போட்டு விட்டு சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து அனைத்து வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications