தமிழகத்தில் ரூ.92 கோடி பறிமுதல்: நாளை முதல் பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிப்பு- லக்கானி
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நடந்திய சோதனையில் இதுவரை ரூ.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 190 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளதாகவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே19 தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மார்ச் 4ம் தேதி முதல் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் இதுவரை 190 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. அரசியல்வாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தேர்தல் பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இதுவரை ரூ.92 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் நேற்று நடந்த சோதனையில் ரூ.3.58 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 6 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகளிலும் ஷிப்டுக்கு 25 படைகள் வீதம் மொத்தம் 75 குழுக்கள் பணியில் ஈடுபடுவார்கள் என லக்கானி கூறியுள்ளார். மேலும் சென்னையில் மட்டும் தொகுதிக்கு 25 என்ற வீதம் பறக்கும் படை பணியில் ஈடுபடுவார்கள் என லக்கானி தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஓட்டுக்கு நோட்டை கொடுத்து விடுவார்களா? அல்லது பால்காரர், பேப்பர்காரர் வடிவில் டோக்கன்களை போடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓட்டுக்கு பணமோ, பொருளோ, டோக்கனோ கொடுத்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்றும் ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளதால் இந்த தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது கட்டுப்படுத்தப்படும் என்றே கூறப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications