தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல்: வரும் 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேரந்த 57 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 57 இடங்களுக்கும் ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகியோரும், காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பனும் ஓய்வு பெறவுள்ளனர். இந்த பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2016 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் அறிவிக்கை 24-5-2016 அன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டு, அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் ஆகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு 31-ம் தேதி கடைசி நாளாகும். 1-6-2016 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 3-6-2016 ஆகும். அதன்பின்னர் தேவைப்பட்டால் 11-6-2016 அன்று வாக்குப்பதிவு நடத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 13-6-2016 அன்று தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2016 முதல் 31.05.2016 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881ஆம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு, தேவைப்படின், சட்டமன்ற குழுக்கள் அறையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications