ஒரு வீட்டுக்கு ரூ.15,000 பணமா?.. 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்குமா தமிழக அரசு?
சென்னை: வெள்ள நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசுக்கு விடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையை உலுக்கிவிட்டுப்போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எமஎல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்..

எனினும், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.
நிவாரண நிதி: இந்த புயல் காரணமாக, பலத்த பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.. எனவே, தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரண நிதியை வழங்கி உள்ளது. எனினும், இந்த ஏழை, எளிய, தினசரி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் உள்ளனர்..
இவர்கள் தங்களது 15 நாள்கள் வருமானத்தை இழந்துள்ளதுடன், உடைமைகளையும் இழந்துள்ளதால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனடியாக நிவாரண நிதியாக, குடும்பத்துக்கு, 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனுடன் அத்தியாவசிய பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பாதிப்புக்கு ஆளானவர்கள், பழுதடைந்த பொருட்களை சீர்செய்வதற்கே, தங்களுக்கு 20 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்..
பள்ளமான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தவிர, மேடான பகுதிகளிலுமே இந்த முறை வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது.. மாடிகளில் வசிப்போருக்கு, வாகனங்கள் சேதமாகி உள்ளன..
கோரிக்கை: ஆனால், தரைத்தள குடியிருப்பாளர்களுக்கு, வாகனத்துடன் சேர்த்து, வீட்டில் உள்ள மொத்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.. அதனால்தான், அரசு தரும், 6,000 ரூபாய் நிவாரணம், தங்களது பாதிப்புகளை ஈடு செய்யாது என்கிறார்கள்..
முக்கியமாக, தண்ணீருக்கு வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டர்களே அதிக விலை விற்கின்றனவாம்.. மேலும், சாதாரண வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வும் 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகும்.. இதைத்தவிர, தரைத்தள வீட்டில் பாழாகியிருக்கம் மின்சாதன பொருட்களையும் மறுபடியும் பணம் கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. எனவே, எப்படி பார்த்தாலும், ஒவ்வொரு வீட்டுக்கும், 10,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும் என்று புலம்புகிறார்கள்.
ஆலைகள்: சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் ஏராளமான ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்த ஆலைகளின் ஆயில் கழிவுகளால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, 25,000 ரூபாய் நிவாரணம் இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் கிளம்பி உள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள், மழையால் பெருமளவு சேதமடைந்துவிட்டதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளதாலும், பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் இழப்பீடாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் கிளம்பி உள்ளன.
ஆக மொத்தம் 6 ரூபாய் நிவாரண தொகை தங்களுக்கு போதாது என்றும், இந்த தொகையை உயர்த்தி தர வேண்டும் என்றும் அரசுக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications