ஆர்எஸ்எஸ். தொண்டர்களுக்கு ஆளுநர் ரவி பாராட்டு-ஹெட்கேவர் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியால் சர்ச்சை!
சென்னை: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பாரதத்தின் தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் கைவிடப்பட்ட அல்லது வாழும் நமது மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களால் இயன்றதைச் செய்த எண்ணற்ற ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது என தெரிவித்துள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனரான ஹெட்கேவரின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்பவன், தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ள செய்தி:நவராத்திரியின் முதல் நாளான இன்று, நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தின் நன்மைக்காக ஒரு வலுவான மற்றும் இணக்கமான பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கிற்கு அடித்தளமிட்ட மகத்தான தொலைநோக்கு பார்வையாளரான டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களை அவரது பிறந்தநாளில் தேசம் மிகுந்த நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறது.

ஆர்.எஸ்.எஸ். தியாகிகளுக்கு மரியாதை
கடந்த நூறு ஆண்டுகளில் அரசாங்கங்களின் திறமையான அணுகலுக்கு அப்பாற்பட்ட பாரதத்தின் தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் கைவிடப்பட்ட அல்லது வாழும் நமது மக்களின் முன்னேற்றத்திற்காக தங்கள் முழு வாழ்க்கையையும் தன்னலமின்றி அர்ப்பணித்து, இந்த புனித பணியை நிறைவேற்ற தங்களால் இயன்றதைச் செய்த எண்ணற்ற ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது. அவர்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு மகத்தான சேவையைச் செய்து வருகின்றனர். அவர்களில் எண்ணற்றோர் தாய்நாட்டின் சேவைக்காக தங்களின் இன்றுயிரைத் தியாகம் செய்தனர்.
"நவராத்திரியின் முதல் நாளான இன்று, நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தின் நன்மைக்காக ஒரு வலுவான மற்றும் இணக்கமான பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கிற்கு அடித்தளமிட்ட மகத்தான தொலைநோக்கு பார்வையாளரான டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களை அவரது… pic.twitter.com/KO76QIgbnn
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 30, 2025
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தீர்க்கம், மன உறுதி மற்றும் தேசத்திற்கான மகத்தான அர்ப்பணிப்பு, நமது இளைஞர்களுக்கு முழுமையாக #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -ஐ உருவாக்க எப்போதும் ஒரு உத்வேகமாக இருக்கும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவிக்கு கடும் எதிர்ப்பு
ஆளுநர் ரவியின் இந்த வாழ்த்துச் செய்திக்கு ராஜ்பவன், தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில் கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில், "ஒரு மத அமைப்பை நிறுவிய ஒருவரை பற்றி ராஜ்பவன் செய்தி வெளியிடுவது அபத்தமான ஒன்று". "அப்பட்டமான அரசியலமைப்புச்சட்ட விதிமீறல்" என்பது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications