தெரியாம பேசிட்டாரு சாமி.. இந்த கலெக்டரை மன்னிச்சு உட்டுருங்க!
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பதுக்கு வாயில் வாஸ்து சரியில்லாமல் போய் பேசப் போய், இப்போது ஆர்டிஐ ஆர்வலர்களிடம் சிக்கி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக ஊழியர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள்.
வாய் தவறி கலெக்டர் சம்பத் உளலறாகப் பேசியது பின்னர் வைரல் ஆகி இப்போது வரை விடாத கருப்பாக தொடர்ந்து விரட்டி வருவதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள்தான் தற்போது டென்ஷனாக காணப்படுகின்றனர்.
அம்மா அவர்களின் உத்தரவுப்படி நல்ல மழை பெய்துள்ளது.. இதுதான் கலெக்டர் சம்பத் பேசிய பேச்சு..இதை வைத்து ஆர்டிஐ மூலமாக பலரும் மனு அனுப்பி டென்ஷனை ஏற்றி வருகிறார்களாம்.

கலெக்டர் சம்பத்
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத். 2 மாதத்திற்கு முன்பு, அதாவது நவம்பர் - டிசம்பரில் தமிழகத்தை வெளுத்தெடுத்த மழைக்காலத்தின்போது தேவையில்லாமல் வாய் தவறிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
|
அம்மாவின் உத்தரவுப்படி
கலெக்டர் சம்பத், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அம்மா அவர்களின் உத்தரவுப்படி நல்ல மழை பெய்துள்ளது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். வாய் தவறித்தான் பேசினார். ஆனால் கலெக்டர் இப்படியா பேசுவது என்று பலரும் சரமாரியாக கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

வைரல் ஆன உளறல்
கலெக்டர் சம்பத்தின் இந்த உளறல் பேச்சு பின்னர் வைரல் ஆகிய சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து விட்டனர். அதன் "ஆப்டர்ஷாக்" இன்று வரை தொடர்கிறதாம்.

ஆர்டிஐ அம்புகள்
பலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ஆர்டிஐ மூலம் மனுக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம். கலெக்டர் சம்பத் கூறியதற்கான ஆதாரத்தைக் கேட்டு இந்த மனுக்கள் வருகிறதாம். முதல்வர் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவின் நகலைத் தாருங்கள் என்று கேட்டு கொலையாய்க் கொல்கிறார்களாம்.

அதெல்லாம் கெடையாதப்பு
சட்டப்படி கேட்கப்படும் கேள்விகள் என்பதால், கலெக்டர் அலுவலக ஊழியர்களும் சளைக்காமல், இதுதொடர்பாக ஆவணம் எதுவும் இந்த அலுவலகத்தில் இல்லை என்று பொறுப்பாக பதில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications