ஆளும் கட்சி சூரை தேங்காய் போல் சிதறி விட்டது.. துரைமுருகன் நக்கல்!
ஆளும் கட்சி சூரை தேங்காய் போல் சிதறிவிட்டதாக துரைமுருகன் நக்கலடித்துள்ளார்.
சென்னை: ஆளும் கட்சி சூறை தேங்காய் போல் சிதறிவிட்டதாக துரைமுருகன் நக்கலடித்துள்ளார். கருணாநிதி 3 மாதங்களாக பேசாமல் இருந்தாலும் திமுகவுக்குள் ஒரு சிறு அசைவு கூட இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் வரை ராணுவக் கட்டுக்கோப்புடன் இருந்தது அதிமுக. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி அதிகாரப் போட்டியால் பல அணிகளாக சிதறி போயுள்ளது.

அதிமுகவின் இந்த நிலைமை பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சசிகலா தரப்புக்கு முன்னுரிமை கொடுப்பதே அணியில் ஏற்பட்டுள்ள இந்த பிளவுகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபை உறுப்பினர் வைர விழா குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குறித்து பிளவு குறித்து பேசினார். ஜெயலலிதா என்ற ஒரு ஆள் போன பிறகு அதிமுக சூரை தேங்காய் போல் சிதறிவிட்டது என்றார்.
அதேநேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி 3, 4 மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் திமுகவில் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் துரைமுருகன் கூறினார்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications