தமிழக கேரளா எல்லையில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஒருதாசில்தார்,ஒருவட்டாரவளர்ச்சி அதிகாரி,ஒருகாவல்துறை துணை ஆய்வாளர்.உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவில் ஒரு கேமரா மேன்,ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் ஆங்காங்கே திடீர் வாகன சோதனை நடத்தி அளவுக்கு அதிகமாக கொண்டுசெல்லப்படும்பணம்,உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து அவைகளை கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

இன்று தமிழக கேரளா எல்லை புளியறைஎஸ் வளைவு பகுதியில் பறக்கும் படைதாசில்தார் சுமங்கலி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தும் போது தகுந்த ஆதாரமில்லாமல் நாமக்கல் பகுதியை சார்ந்த முகேஷ்(29)என்பவர் ரூபாய்.2.50.இலட்சத்தை வாகனத்தில் கொண்டுவந்த போது அதிகாரிகள் குழுவினர் மடக்கிபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தென்காசி கோட்டாட்சித் தலைவர்.ரமேஷ்க்கும்,துணைக் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கும் தகவல் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் புளியரை வாகனசோதனை சாவடியில் அதிரடி சோதனையை நடத்தினர்.பின்னர் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பிடிப்பட்ட ரூபாயை பார்வையிட்டனர்.

தென்காசி கோட்டாட்சியர் ரமேஷ் நிருபர்களிடம் கூறும் போது;தேர்தல் சமையம் என்பதால் கணக்கில் வராத பணம் வாகனங்களில் கடத்தப்படுவதாக தகவல்கள் கிடைப்பதை வைத்து இந்த சோதனை நடப்பதாகவும்,உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம் என்றும் பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது தென்காசி ஏ.எஸ்.பி.அரவிந்தன்,தாசில்தார் கோமதி சங்கர நாராயணன்.தாசில்தார்.சுமங்கலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+