For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொள்ளையடித்ததை போயஸ் கார்டனில் பதுக்கி வைத்துள்ளது மன்னார்குடி குடும்பம்.. குருமூர்த்தி

வரி ஏய்ப்பின் புகலிடமே போயஸ்கார்டன் தான் என்று துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான எஸ். குருமூர்த்தி கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

    சென்னை: வரி ஏய்ப்பின் புகலிடமே போயஸ்கார்டன் தான் என்றும் சசிகலாவிடம் சாவி இருப்பதால் ஜெ. கோட்டைக்குள் நுழைய முடியாது என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார்கள் என்றும் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் வீடு கோயில் என்ற சென்டிமெண்டை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்று சசிகலா குடும்பம் நினைக்கிறது. அதிமுகவில் மைத்ரேயன், தம்பிதுரை உள்ளிட்ட சிலரே ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கு வேதனை தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அமைச்சர்கள் எல்லாம் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தின் ஊழலை வெளிக்கொண்டு வரவே போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை என்று அச்சுபிசமாகமல் கூறி வருகின்றனர். அமைச்சர்கள், எம்பிகள் தங்களது கருத்துகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து வர அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இது குறித்து இன்னும் வாய் திறக்கவே இல்லை.

    போயஸ்கார்டன் தான் புகலிடம்

    இந்நிலையில் போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனை குறித்து பிரபல ஆடிட்டரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை. போயஸ்கார்டன் தான் மன்னார்குடி மாஃபியா கும்பலின் வரி ஏய்ப்புக்கான புகலிடம். அவர்களின் ஊழலுக்கான ஆதாரங்கள் அங்கு தான் புதையுண்டு கிடக்கின்றன.

    தப்புக்கணக்கு

    தப்புக்கணக்கு

    சசிகலா கையில் சாவி இருப்பதால் ஜெயலலிதாவின் கோட்டைக்குள் யாரும் நுழைந்துவிட முடியாது என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள். உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது. வாழ்த்துக்கள் வருமான வரித்துறை என்று குருமூர்த்தி அந்த கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எந்த கட்சிக்கும் திராணி இல்லை

    குருமூர்த்தியின் கருத்துக்கு பலர் பதில் கருத்தும் பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இயற்கை வளங்கள் முதல் மக்களின் பணத்தை சுரண்டிய மாபியா கும்பலை எதிர்க்க எந்த கட்சிக்கும் திராணி இல்லை. அப்படி இருந்தும் இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து தமிழகத்தை மீட்ட மத்திய அரசுக்கும் , உங்களுக்கும் நன்றி என்று பதில் டுவீட்டியுள்ளார் இவர்.

    எப்படி வாழ்த்தலாம்?

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எல்லாம் தொடர்பு சுத்தமா இல்லியா? அப்புறம் எப்படி வாழ்த்தலாம்? என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்

    English summary
    S.Gurumurthy says in his tweet about Poes garden income tax raid that was the tax haven for Mannargudi Mafia to keep their electronic evidence of loot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X