திருவள்ளூர், திருச்சி தூத்துக்குடி, நெல்லை மா.செக்களுக்கு ஒரே நாளில் ஜெ. அதிரடி கல்தா!
சென்னை: திருவள்ளூர், திருச்சி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலர்களை அதிரடியாக தூக்கியடித்துள்ளார் ஜெயலலிதா. ஒரே நாளில் நான்கு மாவட்ட செயலாளர்களை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரனின் கட்சிப்பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெல்லமண்டி நடராஜன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் நான்கு மாவட்ட செயலாளர்களை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை
துத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் சி.த. செல்லப்பாண்டியன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.நாராயணபெருமாளும்,
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.ஜெயினுலாப்தீனும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ராஜா (எ) அந்தோணி அமலராஜா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி.யும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் டி.பால்துரையும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் ஜெ. அகிலனும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மனோகரன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டக்கழகங்கள் இன்று முதல் பின்வருமாறு சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
1. ஆவடி, 2. மதுரவாயல், 3. அம்பத்தூர், 4. மாதவரம், 5. திருவொற்றியூர்.
1. பொன்னேரி(தனி), 2. கும்மிடிப்பூண்டி, 3. பூவிருந்தவல்லி(தனி), 4. திருவள்ளூர், 5. திருத்தணி.
திருவள்ளூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் வி.அலெக்சாண்டரும், திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிறுணியம் பி.பலராமனும் நியமிக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.
அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சரஸ்வதி ரெங்கசாமி இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
ராதாபுரம் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் எம்.ராஜா (எ) அந்தோணி அமலராஜாவும், பணகுடி பேரூராட்சிச் செயலாளர் பொறுப்பில் எம்.ஜெயினுலாப்தீனும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களை இன்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். pic.twitter.com/ij159v3Hqw
— AIADMK (@AIADMKOfficial) August 17, 2016
ஜெயலலிதா அதிரடி மாற்றம்
அதிமுகவில் கட்சிப்பதவி யாருக்கு எந்த நேரத்தில் பறிபோகும் என்று கூற முடியாது. ப்ளாஷ் நியூஸ் பார்த்துதான் அந்த பதவியில் இருக்கிறோமா இல்லையா என்பதை நிர்வாகிகள் தெரிந்து கொள்ள முடியும்.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளே வெளியே ஆட்டம் ஆடி வருகிறார் எஸ்.பி சண்முகநாதன். கடந்த 2001ம் ஆண்டு அப்போது அமைச்சராகவும், அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்த எஸ்.பி. சண்முகநாதன் மூலம் செல்லப்பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2011ல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட செல்லப்பாண்டியனுக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கட்சி தலைமையிடம் பரிந்துரை செய்தார். இருமுறை வேட்பாளர் பட்டியலில் பெயர் மாற் றப்பட்டு சி.த.செல்லப் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.முதல்முறையாக எம்எல்ஏவாக வெற்றிபெற்ற அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது மாவட்ட செயலாளரான சண்முகநாதனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
திடீரென சண்முகநாதனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு செல்லப்பாண்டியனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவியிலிருந்தும் சண்முகநாதன் நீக்கப்பட்டார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு வளர்ந்து இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு அமைச்சராகவும் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்த சி.த.செல்லப்பாண்டியன் நீக்கப்பட்டு, மீண்டும் எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டார். மீண்டும் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது 2016 சட்டசபை தேர்தலில் சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது எஸ்.பி. சண்முகநாதனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்து சி.த. செல்லப்பாண்டியனுக்கு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல், திருச்சி மாநகர மாவட்ட செயலாளராக இருந்த மனோகரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மனோகரன் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் வெல்லமண்டி நடராஜன் வெற்றி பெற்றார். இதனால், நடராஜனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
ஏற்கனவே மாநகர மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்துவந்த மனோகரன், அதே பதவியில் தொடர்ந்தார். வெல்லமண்டி நடராஜனை அரசியலில் வளர்த்துவிட்டவர் மனோகரன். அந்த வகையில், நடராஜனை தனது ரப்பர் ஸ்டாம்ப் ஆக வைத்திருக்க நினைத்திருக்கிறார் மனோகரன். அது நடக்கவில்லை. இதனால் இருவருக்கும் பனிப்போர் நடந்திருக்கிறது.
இந்த விவகாரம், கட்சியின் தலைமைக்கு புகார் சென்றதாக தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில் மாவட்ட செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக பி.வி.ரமணா இருந்தார். ஆபாச வாட்ஸ்அப் விவகாரத்தில் சிக்கியதால் அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி பறிக்கப்பட்டது.
இதன் பிறகு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வாலாஜாபாத் கணேசன் கவனித்து வந்தார். மீண்டும் ரமணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்து வந்த நிலையில், கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சிறுனியம் பலராமன் எம்.எல்.ஏ-வை மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா.
கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஓபிஎஸ் ஆதரவாளரான அலெக்சாண்டர் எம்எல்ஏவை ஜெயலலிதா நியமித்துள்ளார். இதனால் ரமணா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications