சுவாதி கொலை சம்பவம்.. ஒய்.ஜி.மகேந்திரனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து
சென்னை: இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அடையாளம் தெரியாத வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றன. அதேநேரம், சமூக போராட்டக்காரர்கள் இதற்கு குரல் கொடுக்கவில்லை என்று ஒரு பிரிவினர் அதிருப்தியிலுள்ளனர்.
சுவாதி உயர் ஜாதி பிரிவை சேர்ந்தவர் என்பதால் சமூகத்தில் ஒரு பிரிவினர் அந்த கொலையை கண்டிக்கவில்லை என்பது எதிர் தரப்பின் கருத்தாக உள்ளது.

ஒய்.ஜி.மகேந்திரன்
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இதே கருத்தை வலியுறுத்தி தனது பேஸ்புக்கில் பகிர்ந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியது. இதையடுத்து அது பார்வேர்ட் மெசேஜ் எனக்கூறிய ஒய்.ஜி.மகேந்திரன் அந்த போஸ்ட்டை நீக்கினார். இருப்பினும், அக்கருத்தில் தனக்கு உடன்பாடுதான் என்றும் அவர் சொல்ல தயங்கவில்லை.

எஸ்.வி.சேகர் சர்ச்சை
இந்நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான, எஸ்.வி.சேகர், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும், இதேபோன்ற சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்துக்களுக்கு உதவியில்லை
எஸ்.வி.சேகர் கூறியது: முஸ்லிம்களுக்கு உதவுங்கள், கிறிஸ்தவர்களுக்கு உதவுங்கள். ஏன் இந்துக்களுக்கு உதவ மாட்டேன் என்கிறீர்கள், என்பதுதான் கேள்வி.

சரிசமம் மதசார்பின்மை
ஹஜ்சுக்கு செல்ல பணம் கொடுக்கிறீர்கள், ஏன் காசிக்கு போக பணம் கொடுக்க கூடாதா? தரலாமில்லையா..
எல்லோரையும் சரிசமமாக நடத்துவதுதான் மதசார்பின்மையே தவிர, சிறுபான்மையினரை மட்டும் சந்தோஷப்படுத்துவது இல்லை.

நம்ப மாட்டார்கள்
நீங்கள் சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்துங்கள். அதற்காக ஏன் பெரும்பான்மையினரை புண்படுத்துகிறீர்கள். இந்துக்களை திட்டுவது, இந்துக்களை எதிராக பேசுவது.. இப்படி செய்தால் அவர்கள் (சிறுபான்மையினர்) சந்தோஷப்பட்டுவிடுவார்களா?. இல்லை.., உங்களை நம்பிவிடுவார்களா? நம்ப மாட்டார்கள்.

எனக்கு இருக்கிறார்களே
எனக்கு எத்தனையோ சிறுபான்மை நண்பர்கள் உள்ளனர். எதிர்த்த வீடு, பக்கத்து வீடு நண்பர்கள் கூட முஸ்லிம்கள்தான். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

கண்டிப்பு
பொது இடத்தில் வைத்து நடைபெற்ற சுவாதி கொலையை, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைத்து தரப்புமே கண்டித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியும் கண்டித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறிப்பிட்ட ஒரு தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டுதான் உள்ளன. விமர்சனத்திற்கு பிறகு, காலதாமதமாக கண்டித்தார்கள் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.
-
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications