எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு மத்தியில் விஷமிகள் செய்த வேலை.. பரபர!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவிக்கப்பட்டது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டுச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டை அணிவித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சிலை அருகே உள்ள கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிமுக பாஜக கூட்டணி அண்மையில் முறிந்துள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் எம்ஜிஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு அணிவித்தது அதிமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து எம்ஜிஆர் சிலையில் போடப்பட்டிருந்த காவி துண்டை போலீசார் அகற்றினர். தொடர்ந்து காவல்துறையினர் காவி துண்டை போட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications