மதுரையைச் சேர்ந்த பெண் கலெக்டர் மரணம் – சகாயம் ஐ.ஏ.எஸ் நேரில் அஞ்சலி
மதுரை: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கலெக்டர் மரணமடைந்தார். அவரது உடலுக்கு மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டரும், கிரானைட் ஊழல் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்தி வருபவருமான சகாயம் ஐ.ஏ.எஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா ரெங்கராஜன். இவர் மதுரை சட்டக்கல்லூரியில் சட்ட படிப்பை முடித்தவர். பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று மேற்கு வங்காளம் ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார்.
கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மருத்துவ விடுப்பில் மதுரை வந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீபிரியா ரெங்கராஜனின் கணவர் லஜபதிராய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு அகிலன்ராய், கயல்ராய் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications