கிரானைட் மோசடி: நவம்பர் 23ல் அறிக்கை தாக்கல் செய்வாரா சகாயம்?
மதுரை: கண்மாயைக் காணோம்... நிலத்தைக் காணோம்... தண்ணீர் வரத்துக் கால்வாய்களைக் காணோம், மலையைக் காணோம் என்று பலரும் புகார் கொடுத்து பகீர் கிளப்பிய கிரானைட் குவாரி மோசடி விசாரணையை முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆக இருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். 11 மாதங்களாக 21 கட்டமாக நடத்திய விசாரணை அறிக்கையை வரும் 23ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார் சகாயம்.
கடந்த அக்டோபர் 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நவம்பர் 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய இறுதிக்கெடு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இம்முறை அவகாசம் கேட்காமல் தனது அறிக்கையை தாக்கல் செய்துவிடுவார் சகாயம் என்றே பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்ட சகாயம். இரண்டு மாதங்களில் விசாரணை முடிக்க வேண்டும். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் வரை 21 கட்டமாக விசாரணை நடத்தியும், கள ஆய்வில் ஈடுபட்டும் பல ஆயிரம் பக்கங்களில் அறிக்கை தயாரித்துள்ளார்.

விசாரணையை துவக்கிய சகாயம்
கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் சகாயம் விசாரணையை தொடங்கிய போது, அரசை ஏமாற்றியும், கிராம மக்களை மிரட்டியும் நிலங்களை அபகரித்து, விவசாய கால்வாய்கள், கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்த கிரானைட் குவாரி உரிமையாளர்கள் பற்றி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் புகார் கொடுத்தனர். காவல் துறையினரே தங்கள் நிலம் பறிபோனது பற்றி புகார் கொடுத்தனர்.

21 கட்ட விசாரணை
இந்த புகார்களின் அடிப்படையில் 21 கட்டங்களாக ஆய்வு நடத்தினார். கிரானைட் குவாரிகளால் மாயமான மலைகளும், அழிந்து போன கண்மாய்களும் தெரியவந்தன. இதற்கு காரணமான பல்வேறு துறை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

நரபலி புகார்கள்
விசாரணையின் இறுதிக்கட்டத்தில் நரபலி புகார் கிளம்ப, அதையும் தோண்டித் துருவியது குழு. சுடுகாட்டில் இரவில் தங்கினார் சகாயம். தமிழகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கைந்து எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து கொடுத்துவிட்டுதான் தன்னுடைய விசாரணையை முடித்தார் சகாயம். இதனையடுத்து தன்னுடைய விசாரணை குறித்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

அறிக்கை தயாரிப்பு
கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 15ம் தேதி கடைசி தேதி ஆனால் ஆவணங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாததால் மேலும் ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் சார்பாக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

நவம்பர் 23 இறுதிக்கெடு
இதனையடுத்து நீதிபதிகள், சகாயத்திற்கு வரும் 5 வார காலம் ( நவம்பர் 23ம் தேதி வரை) அவகாசம் வழங்கியதுடன், இதற்கு அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை முன்னதாக தயாரானால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்ததுடன் வழக்கை நவம்பர்23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சகாயத்தின் அறிக்கை
பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சேர்த்து அறிக்கையாக தாக்கல் செய்யும் சகாயம், இதுவரை நடந்தது என்ன, இதனைச் சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தகவல்களையும் அறிக்கையில் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலை கிளப்புமா?
சகாயத்தின் அறிக்கையில் மலைகள், கண்மாய்கள் அழிப்பு, நரபலி குற்றச்சாட்டு, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள அறிக்கை பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications