குப்பையை அகற்ற தயங்கிய அதிகாரிகள் – தானே களம் இறங்கிய சேலம் கமிஷனர்
சேலம்: சேலத்தில் காவல்துறை அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் கமிஷனர் அமல்ராஜே நேரடியாக களம் இறங்கிய சம்பவம் அங்கு மற்ற அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து புதிய கமிஷனர் அலுவலகம் செயல்படத் தொடங்கியதும் பழைய தொங்கும் பூங்காவில் அமைந்திருந்த அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், கோப்புகள் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டன.
தனித்தனியாக பல்வேறு துறைவாரியான பிரிவுகள் பல்வேறு அறைகளில் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றை அலுவலக ஊழியர்கள் சரியாக பராமரிப்பு செய்வதில்லை. கவனத்தில் கொள்வதும் இல்லை.
பல்வேறு துறைகளில் டேபிள் மேலாகவே கோப்புகள் தேங்கிக் கிடப்பதுடன் அலுவலகம் முழுவதும் குப்பைகள் குவிந்து, தேங்கி கிடந்தன.
இது குறித்து, அதிகாரிகள் , ஊழியர்களை பல முறை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்தும் எவ்வித பலனும் ஏற்பட வில்லை. இந்நிலையில் நேற்று கமிஷனர் அலுவலகத்தை அமல்ராஜ் பார்வையிட்டார்.
அங்கு 14 ஆண்டுகளாக குவிந்து கிடந்த குப்பையை மற்ற அதிகாரிகள் அகற்ற தயங்கிய நிலையில் கமிஷனரே அகற்றினார்.
இதனால் மற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர்தான் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள், கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
இந்த பணிகளை கமிஷனர் நேரடியாக களம் இறங்கி செயல்படுத்தியதை அறிந்த சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று மதியம் முதலே போலீஸ் ஸ்டேஷன்களை சுத்தம் செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications