தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து என்ஜினியரிங் மாணவர் பலி - கோழி பிடித்த போது பரிதாபம்!
சேலம்: சேலம் அருகே கோழியை துரத்திச் சென்ற என்ஜினியரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள நடுவலூர் ஊராட்சி, பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜபாண்டியன் (26). இவர் சேலத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக கடந்தவாரம் வீட்டிற்கு வந்திருந்தார் ராஜபாண்டியன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று கறி சமைப்பதற்காக தனது வீட்டில் வளர்க்கப் பட்டு வரும் கோழியை அவர் பிடிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், ராஜபாண்டியனின் கைக்கு சிக்காமல் போக்கு காட்டியுள்ளது கோழி. அப்போது எதிர்பாராத விதமாக தனது வீட்டின் அருகிலிருந்த தண்ணீரில்லாத 126 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார் ராஜபாண்டியன். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர், ராஜபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications