ரவீந்திரநாத் நம்பரை ப்ளாக் செய்யாதது ஏன்? 3 மாதம் எங்கே போனீங்க? காயத்ரிக்கு சேலம் கவுசல்யா கேள்வி!
சேலம்: ரவீந்திரநாத் எம்.பி. மீது மீது காயத்ரி என்பவர் கொடுத்த பாலியல் தொல்லை புகார் பொய்யானது என்றும் நம்பத் தகுந்தது அல்ல எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெண் நிர்வாகி சேலம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பெங்களூர் புகழேந்தியுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் காயத்ரி தேவிக்கு சில கேள்விகளையும் முன் வைத்துள்ளார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக சேலம் கவுசல்யா அளித்த பேட்டி வருமாறு;

''ரவீந்திரநாத் எம்.பி. காயத்ரி என்கின்ற பெண்ணை தவறுதலாக அழைத்ததாகவும் பேசியதாகவும் கூறி பேட்டி அளித்துள்ளார். ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை ஏன் இவர் அன்றைய தினமே வெளியிலே சொல்லவில்லை? புகார் கொடுக்கவில்லை?, கொடநாடு கொலை வழக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க நடத்திய ஆர்ப்பாட்ட தினத்தில் கூறுவது ஏன்? காயத்ரி தேவி மூன்று மாதங்கள் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்?''
''எவராக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் தவறாக பேச ஆரம்பித்தால் உடனடியாக அவரை எச்சரித்து அலைபேசி எண்ணை துண்டித்து அவருடன் இருக்கின்ற தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். 11 மணிக்கு வாட்ஸ் அப் காலில் அசிங்கமாக பேசினார், அவர் தொடர்ந்து விடியற்காலை 4 மணி வரை பேசிக் கொண்டே இருந்தார் என்று சொன்னால், நீங்கள் ஏன் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள்? ஏன் அந்த அழைப்பை ஏற்க வேண்டும் எடுக்க வேண்டும் கேட்க வேண்டும்?''

''ஒருவர் தவறாக அசிங்கமாக பேசும் பொழுது அவருடைய அப்பாவிடம் சென்று பஞ்சாயத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுபவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவேன் என்று சொல்லுவது எப்படி சரி ஆகும் எனவே இந்த புகார்கள் நம்பும்படியாக இல்லை.''
''ஆர்ப்பாட்ட தினத்தன்று இப்படிப்பட்ட செய்திகளை பரப்புவதற்கு சொல்லிக் கொடுத்தது யார்? இதன் பின்னால் இருக்கும் அரசியல்வாதி யார்? ரவீந்திரநாத் எம்பி பெயரையும் அண்ணன் ஓபிஎஸ் பெயரையும் கெடுப்பதற்காக நடத்திய சதித்திட்டமா என்கிற சந்தேகம் வலுவாக இருக்கிறது.'' இவ்வாறு சரமாரி கேள்வி எழுப்பியதோடு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளார் கவுசல்யா.












Click it and Unblock the Notifications