சேலத்தில் பெண் ஏட்டு தற்கொலை முயற்சி – உயர் அதிகாரி திட்டினாரா?
சேலம்: சேலம் சிறையில் பெண் ஏட்டு ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி அருகில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஏட்டாக பணியாற்றி வருபவர் சங்கீதா. கோவையை சேர்ந்த இவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்து இருந்தார். பின்னர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறை அதிகாரிகள் சங்கீதாவை தூக்கி சென்று சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் உயிர் தப்பினார்.
சங்கீதா பணிக்கு வந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவரை பார்த்து சங்கீதா தொப்பி அணிந்து சல்யூட் அடிக்கவில்லையாம். இதனால் அந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டு சங்கீதாவிடம், இதுபற்றி சிறை துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
இதனால் பயந்த சங்கீதா தன்னை உயர் அதிகாரிகள் விசாரித்து சஸ்பெண்ட் மற்றும் வேறு எந்த நடவடிக்கைகள் எடுத்து விட்டால் என்ன செய்வது என பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் மத்திய சிறை சூப்பிரெண்ட் சண்முக சுந்தரம் விசாரித்து வருகிறார்.
இந்த தற்கொலை முயற்சி சம்பவம் சேலம் பெண்கள் கிளை சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications