6வது படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் – மகன்களுடன் கைது!
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரும், தந்தையை காப்பாற்ற முயன்ற மகன்களும் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சமுத்திரம்பச்சான்வளவு பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது காளியப்பன் என்பவர், பள்ளி மாணவியிடம் பேச்சுக் கொடுத்தபடி, திடீரென பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அழுது கொண்டே வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அந்த மாணவியின் தந்தை தனது மகளுடன் வந்து காளியப்பனிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காளியப்பனின் இரு மகன்களும் மாணவியின் தந்தையைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து மாணவியின் தந்தை எடப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று காளியப்பன், மற்றும் அவரது 2 மகன்களைக் கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கைதான 3 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications