சேலத்தில் ஷாக் சம்பவம்.. ஹோட்டல் மாடியிலிருந்து குதித்த 2 மாணவிகள்.. ஒருவர் பலி!
சேலத்தில் காணாமல் போன 8ம் வகுப்பு மாணவிகளில் ஒருவர் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து பலியானார். மற்றொரு மாணவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Recommended Video

சேலம்: சேலத்தில் காணாமல் போன 2 மாணவிகள் ஓட்டலின் மாடியில் இருந்து குதித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 2வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் மாடியில் இருந்து 2 பேரும் குதித்துள்ளனர்.
படுகாயமடைந்த மற்றொரு மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அரிசிபாளையம் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த கவிஸ்ரீ, ஜெயராணி நேற்று காணாமல் போயினர்.
மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இரவு முழுவதும் போலீசார் தேடி வந்தனர்.

மாணவி தலை உடைந்து மரணம்
சேலம் அக்ரஹாரம் பகுதியில் பூட்டிக்கிடந்த ஒரு விடுதியில் பின்புறமாக ஏறிச்சென்று 4வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி ஜெயராணி தலை உடைந்து உயிரிழந்தார்.

உறவினர்கள் கதறல்
மற்றொறு மாணவி படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்கமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் கண்ணீருடன் காத்துக்கொண்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை
மாணவிகள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார். இருவரும் பேசிக்கொண்டே இருந்ததால் ஆசிரியை இடம் மாற்றி அமர வைத்தாராம். இதனால் மனமுடைந்த மாணவிகள் மாயமானதாக கூறப்படுகிறது. மாணவிகளின் தற்கொலைக்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

4 மாணவிகள் தற்கொலை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஆசிரியை திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமாக ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குள்ளாக சேலத்தில் மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு பாடங்களுடன் கவுன்சிலிங் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications