13-வது முறை எம்.எல்.ஏ..... கருணாநிதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் வாழ்த்து
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 13-வது முறை எம்.எல்.ஏ.வாக வென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதிக்கு இரா. சம்பந்தன் அனுப்பிய கடிதம்:
தாங்கள் 13ஆவது முறையாக தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். இதுவொரு சாதாரண சாதனையல்ல.

எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனை யாகும். ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள்.
உங்களுக்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் சாபில் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.
13-வது முறை எம்.எல்.ஏ..... கருணாநிதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் வாழ்த்து #karunanidhi pic.twitter.com/AQI2S2zCCl
— Oneindia Tamil (@thatsTamil) May 26, 2016
இவ்வாறு இரா. சம்பந்தன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்று எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications