சட்ட விரோத குற்றவாளிகளா தமிழக மீனவர்கள்?: சரத்குமார் கொதிப்பு
சென்னை: தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக பல்வேறு பொருட்களை கடத்திச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பகுதியை மீறிச் செல்கிறார்கள் என்று ஒட்டுமொத்த மீனவர்களையும் சட்ட விரோதக் குற்றவாளிகளாக அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம், இலங்கை மீனவர்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தக்க பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் கடலோர காவல்படை உயர் அதிகாரி நாட்டியால் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக பல்வேறு பொருட்களை கடத்திச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பகுதியை மீறிச் செல்கிறார்கள் என்று ஒட்டுமொத்த மீனவர்களையும் சட்ட விரோதக் குற்றவாளிகளாக அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தங்களுடைய பணியை ஒழுங்காக செய்யாமல், ஒட்டுமொத்த மீனவர்களையும் குற்றம் சாட்டுவதுபோல் வாக்கு மூலம் அளித்துள்ள கடற்படை காவல் அதிகாரியைக் கண்டிப்பதோடு, இந்த வாக்கு மூலத்தைத் திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications