சின்னம்மா, நீங்க தான் அதிமுகவை வழிநடத்தணும்மா: சசியிடம் சரத்குமார் வேண்டுகோள்
சென்னை: அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சசிகலாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சரத்குமார் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாண்புமிகு புரட்சித் தலைவியின் வீட்டிற்கு இது போன்ற சூழலில் வந்திருப்பது வருத்தமாக உள்ளது. அவர் இறக்கவில்லை. நம்முடன் தான் இருக்கிறார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 ஆண்டுகளாக அன்பு சகோதரியாக இருந்த சின்னம்மா அவர்கள் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிமுக தோழர்களும், தோழமை கட்சியினரும் அம்மா எந்த இலக்கை நோக்கி கடந்த தேர்தலில் பயணித்தார்களோ அதை முழுமையாக அடைய சின்னம்மா எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் சின்னம்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications