அன்புச் சகோதரர் விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்... சொல்வது சரத்குமார்!
சென்னை: நான் அதிமுக கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்த்தை விமர்சித்திருக்கலாம். ஆனால் என்றைக்குமே அவர் எனது அன்புச் சகோதரர்தான். அவர் பாஜக கூட்டணிக்கு வந்தால் நிச்சயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் கூட்டணியாக மாறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கு சரத்குமார் அழைப்பு விடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர்களாக இருந்தபோது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.

விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் படம்தான் சரத்குமாருக்கு ஏற்றம் தந்த படம். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதை விட முக்கியமாக நடிகர் சங்கத்தில் இருவரும் இணைந்து கலக்கினார்கள்.
உண்மையில் விஜயகாந்த்துக்கு நல்ல தளபதியாக இருந்தவர் சரத்குமார்தான். விஜயகாந்த்தின் திட்டங்களை, கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருந்தார் சரத்குமார்.
தனக்குப் பின்னர் சரத்குமார் தலைவராக வேண்டும் என்பது விஜயகாந்த்தின் விருப்பம். அதேபோல சரத்குமார் தலைவரானார். இடையில் இருவரும் அரசியலிலும், தனிப்பட்ட முறையிலும் எதிரும் புதிருமாக போய்விட்டனர். இதில் காரசாரமான விமர்சனங்களும் உருவாகி விட்டன. இந்த நிலையில் தற்போது விஜயகாந்த், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என்று அழைத்துள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கும் விஜயகாந்த்துக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. எப்போதுமே அவர் எனது அன்புக்குரிய சகோதரர்தான். அதிமுக கூட்டணியில் இருந்தபோது அரசியல் ரீதியாக அவரை விமர்சித்துள்ளேன். அவ்வளவுதான்.
அவர் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். அதேபோல பாமகவும் வர வேண்டும். இவர்கள் இருவரும் வந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமை வாய்ந்த மாபெரும் கூட்டணியாக மாறும் என்றார் சரத்குமார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications