சரத்குமாரிடம் பிரிமியர் பத்மினி முதல் ஆடி கார் வரை 10 வாகனங்கள்..வேட்புமனுவில் தகவல் !
தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.சரத்குமார் தன்னிடம் பிரிமியர் பத்மினி முதல் ஆடி வரையிலான 10 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.8.72 கோடியில் அசையும் சொத்தும், ராதிகாவிடம் ரூ. 9.22 கோடியில் அசையும் சொத்தும் உள்ளதாக தனது வேட்புமனுவில் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி ராதிகாவுடன் வந்து நேற்று மனுத் தாக்கல் செய்தார்.

சரத்குமார் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ரூ.1.81 கோடி மதிப்பிலான 10 வாகனங்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் பிரிமியர் பத்மினி முதல் ஆடி வரையிலான கார்களும் அடங்கும்.
தனது தொழிலை நடிகர், தயாரிப்பாளர் என குறிப்பிட்டுள்ள சரத்குமார் கையில் ரொக்கமாக ரூ. 30.56 லட்சம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி ராதிகா ரூ. 13.28 ரொக்கம் கையில் வைத்துள்ளார்.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 39.86 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அதே நிதியாண்டில் ராதிகா ரூ. 1.25 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் வசம் ரூ.8.72 கோடியில் அசையும் சொத்தும், ராதிகாவிடம் ரூ. 9.22 கோடியில் அசையும் சொத்தும் உள்ளது. தென்காசி குத்துக்கல்வலசையில் 86.59 செண்ட் பரப்பில் நிலம் தன் பெயரில் இருப்பதாக சரத்குமார் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ரூ. 29.07 லட்சம் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைர நகைகள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராதிகா வசம் ரூ. 1.33 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் உள்ளன. இதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்க கைக்கடிகாரமும் அடங்கும்.
இதுதவிர ரூ. 19.75 கோடி மதிப்பில் செந்னை தியாகராய நகர், கொட்டிவாக்கம், படூர் கிராமம் ஆகிய இடங்களில் குடியிருப்பு கட்டங்களும் சரத்குமார் பெயரில் உள்ளன.
வங்கியில் ரூ.1.10 கோடியும், தனி நபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.10.74 கோடியும் கடன் பெற்றுளதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications