அதிமுக கூட்டணியில் திருச்செந்தூரில் சரத்குமார், திருவாடனையில் கருணாஸ் போட்டி!
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் ஆர் சரத்குமார் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
சரத்குமார் கட்சிக்கு கடந்த முறை இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சமீபத்தில் அக்கட்சி இரண்டாக உடைந்தது. எனவே இப்போது ஒரு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருணாஸ்
சமீபத்தில் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் அமைப்புத் தொடங்கிய நடிகர் கருணாஸ், சமீபத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
அவருக்கும் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடனை தொகுதியில் தனது முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போட்டியிடுகிறார் கருணாஸ்.
சரத்குமார், கருணாஸ் இருவரும் நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டு கடுமையாக மோதியவர்கள். ஆனால் இந்த இருவரும் இப்போது அதிமுக அணியில் ஒருவரையொருவர் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருவருமே இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications