பாஜகவுடன் தேமுதிக - பாமக இணைந்தால் இது 'மெகா' கூட்டணியாக அமையும்: சரத்குமார்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் தேமுதிக, பாமக இணைந்தால் அந்த அணி மெகா கூட்டணியாக அமையும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே அக் கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறோம்.
இந்த கூட்டணிக்கு தே.மு.தி.க., பா.ம.க. வந்தால் மெகா கூட்டணியாக அமையும். திமுக, அதிமுகவுக்கு பதிலாக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மேலும், அதிமுக கூட்டணியில் நான் இருந்தபோது, அரசியல் ரீதியாக விஜயகாந்தை விமர்சித்திருப்பேன். விஜயகாந்த் எனது பாசத்துக்குரிய சகோதரர். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications