டாஸ்மாக் கடைக்கு யாராவது போனீங்க! தூக்கிடுவேன்.. கட்சித் தொண்டர்களுக்கு சரத்குமார் எச்சரிக்கை
நெல்லை: 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நான் வெற்றிபெற்று முதல்வர் ஆவேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடிகரும் அந்த கட்சியின் தலைவருமான சரத்குமார் பேசுகையில் அரசியலில் இருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை.

எனக்கு 3 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். ஒரு மகளுக்கு திருமணத்தை முடித்துவிட்டேன். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். மகன் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார். அரசியலில் நான் ஈடுபடுவதால் என்னை வீட்டில் தடுப்பவர்கள் யாரும் இல்லை.
கடந்த 56 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர் வழித்தடங்களை சரியாக செயல்படுத்தவில்லை. இலவசங்கள் வழங்குவதை தவிர்த்துவிட்டு அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியிருந்தால் இந்த நிலை சென்னைக்கு ஏற்பட்டிருக்காது. ஜனநாயகம் எல்லாம் மாறிவிட்டது. அதற்கு பதில் பணநாயகம் வந்துவிட்டது.
பணத்தால் அரசு நடத்தும் நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஜனநாயகம் மலரும். உலகளவில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வராக நான் பதவியேற்பேன்.
திராவிட இயக்கங்களின் ஆட்சி தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களை விரட்டி விட்டு வட இந்தியர்களை வைத்து வாக்களித்து அவர்களே வெற்றியும் பெற்றுவிடுவார்கள். இலவசங்களை தவிர்ப்பதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளம்.
சென்னை மக்களுக்கு அரசு நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்காது. அண்மையில் எனது மாமியார் கீழே விழுந்துவிட்டார், அவரை பார்த்து நலம் விசாரிக்க சென்றேன். அப்போது அவர் "உன்னை எப்போது முதல்வராக பார்க்க போகிறேன்" என கேட்கிறார். அவருக்கு 85 வயதாகிவிட்டது. வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள்தான் முதல்வர் என என் மனைவியும் சொல்லிவிட்டார்.
மற்றவர்களுக்கு எல்லாம் முதல்வர் ஆசை இருக்கும் போது எனக்கு வரக் கூடாதா, எனக்கு அந்த ஆசை வந்தால் காமெடியாம். மற்றவர்களுக்கு வந்தால் சீரியஸாம். எனது மனசு சுத்தம். அதிகமாக உழைப்பவன். சரத்குமார் சொல்லிவிட்டார் நாளை அமைச்சர் ஆகிவிடுவார் என நினைக்காமல் ஆக்கிவிடுவோம் என நினையுங்கள். அதற்காக உழையுங்கள். மன தைரியத்துடன் முன்னேறுங்கள்.
டாஸ்மாக் கடைக்கு யாராவது நம் கட்சித் தொண்டர்கள் சென்றால் கட்சியை விட்டு தூக்கிவிடுவேன். இதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்றார். அனைத்துக் கிராமங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் இருக்கும் வகையில் கழிவறை வசதியை செயல்படுத்துவேன். தகுதியற்ற அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்துவிடுவேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications