நான் கேட்கிறேன்... விஜயகாந்த்துக்கு என்ன தகுதி இருக்கு?.. சரத்குமார்
மதுரை: முதல்வர் ஆவேன் என்று கூறி வருகிறாரே விஜயகாந்த், அந்தப் பொறுப்புக்கு வர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
மதுரையில் 5 இடங்களில் சரத்குமார் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பேசும்போது விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தார்.
சரத்குமார் பேச்சிலிருந்து...

எல்லா இடத்திலும் எழுச்சி
நான் தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியை காண முடிகிறது. மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றினார். அது மட்டுமின்றி சட்டசபையின் 110 விதியின் கீழ்அறிவித்த 185 திட்டங்களுக்கு செயல்முறை வடிவம் கொடுத்து அதனை நிறைவேற்றி இருக்கிறார். இதன் மூலம் மக்களை பற்றி சிந்திக்கும் முதல்வரை இந்த மாநிலம் பெற்று இருக்கிறது.

தொலைநோக்கு முதல்வர்
விவசாயிகள் ஆனாலும் சரி, தொழிலாளர்கள் ஆனாலும் சரி அவர்களுக்கென்று திட்டங்களை தயாரித்து ஒரு தொலைநோக்குடன் செயல்படும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார்.

பொய் வாக்குறுதிகள்
அதிமுகவை எதிர்க்கும் கூட்டணிகளை பற்றி உங்களுக்கு தெரியும். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பொய்யான வாக்குறுதிகளை திமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் அளித்து வருகின்றனர். திமுக - காங்கிரஸ் இடையே அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி.

டிரஸ்ஸை மாற்றி ஏமாற்றும் ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் தனது உடையை மாற்றி கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். மக்கள் பிரதிநிதிகள் இனி மக்களை தேடி செல்லக்கூடாது என்று ஸ்டாலின் கூறுகிறார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மையை இப்போது அவர் கண்டுபிடித்து இருக்கிறார்.

பொய் - பித்தலாட்டம்
திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை. பித்தலாட்ட அறிக்கை. காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது சுயவிளம்பரத்திற்காக தனிப்பட்ட விமர்சனங்களை செய்து வருகிறார்.

என்ன பேசுறார்னே புரியலையே
அடுத்ததாக மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. அப்படி புரிந்தால் தான் அவருக்கு பதில் சொல்ல முடியும். ஆனால் இவரை முதல்வராக்குவோம் என்று மக்கள் நலக் கூட்டணியினர் கூறுகிறார்கள். முதல்வராக அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. அவரை முதல்வராக ஏற்று கொள்ளவும் மக்கள் தயாராக இல்லை என்றார் சரத்குமார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications