என் வீட்டில் மட்டும் ஏன் இந்த சோதனை? சரத்குமார் குமுறல் !
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யக்கூடாது என்று சிலர் நினைப்பதாக சரக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: வருமான வரித்துறை சோதனை மூலம் என்னை யாரும் முடக்க முடியாது என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் அதிமுக இரண்டாக பிளவுபட்டு தேர்தலை சந்திக்கிறது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

இதனிடையே சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று முன்தினம் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை முதல் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சரத்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி தினகரனை ஆதரித்து சரத்குமார் நேற்று வ.உ.சி.நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய சரத்குமார், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்த மறுநாளே வருமான வரித்துறையினர் அதிகாலை 5 மணிக்கு என் வீட்டு கதவை தட்டினர். சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்றார்கள். தாராளமாக சோதனையிடுங்கள் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
வீடு முழுக்க சோதனை செய்ததில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சினிமா பார்த்து நீங்கள் தந்த பணம் தான் என்னிடம் உள்ளதே தவிரவேறு எந்த பணமும் என்னிடம் கிடையாது.
டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த பிறகு தான் இப்படி எல்லாம் நடக்கிறது. அவருக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். இதற்காக வீட்டிலேயே என்னை முடக்கப்பார்த்தனர். ஆனால் என்னை யாரும் முடக்க முடியாது.
ஜி.கே.வாசனை கூட ஓ. பன்னீர்செல்வம் சென்று சந்தித்தார். அதற்காக ஜி.கே.வாசன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததா? இல்லையே. என் வீட்டில் மட்டும் ஏன் இந்த சோதனை? என கேள்வி எழுப்பினார். மேலும் அம்மாவின் திட்டங்களை செயல்படுத்த டி.டி.வி தினகரனை வெற்றி பெறச்செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications