சசி பெருமாள் உடலை வாங்க மறுத்து ஊர் திரும்பிய உறவினர்கள்- மகன் உண்ணாவிரதம்
கன்னியாகுமரி: மதுவிலக்கு அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி சசிபெருமாளின் உறவினர்கள் சேலத்திற்கு புறப்பட்டு சென்று விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சசிபெருமாளின் மகன் சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது உடலை வாங்குவதற்காக அவரது சகோதரர், மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

தொடர் போராட்டம்
தொடர்ந்து அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சசிபெருமாள் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் சஞ்சன் சிங் சவான் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வழிப்பாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

உடலை பெற மறுப்பு
அப்போது, நீங்கள் சென்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பட்டியலை எடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த சசிபெருமாள் உறவினர்கள், நீங்கள் சொன்னால் போதாது, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்படி அரசு அறிவித்தால் மட்டுமே உடலை வாங்கிச் சொல்வோம் என்று கூறினர்.

நிதி உதவி வேண்டாம்
மேலும், மாவட்ட நிர்வாகம் எவ்வளவு நிதியுதவி வேண்டும், உடலை கொண்டு போகும் செலவை ஏற்கிறோம் என்று கூறி கொச்சைப்படுத்துகிறார்கள். எங்களுக்கு அரசு சலுகை வேண்டாம், எங்களது கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்றும் சசிபெருமாளின் உறவினர்கள் கூறினர்.

சொந்த ஊர் திரும்பினர்
மாவட்ட ஆட்சியர் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் கொள்கையில் சசிபெருமாள் உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அவர்கள் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

அதிரடிப்படை குவிப்பு
சசிபெருமாள் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.

சேலத்தில் உண்ணாவிரதம்
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் மகன் நவநீதகிருஷ்ணன் சேலம் காந்தி சிலை அருகில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications