For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா வீட்டோடு இருந்து... அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோடு கடந்த 30 வருடமாக அவரது வீட்டோடு தங்கியிருந்து தற்போது அவரது மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார் சசிகலா நடராஜன்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத சசிகலா, ஜெயலலிதாவோடு அவரது வீட்டோடு கடந்த 30 வருடமாக தங்கியிருந்த சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

1957இல் இவர் மன்னார்குடியில் பிறந்தார். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த இவரின் தாத்தா சந்திரசேகர் அவ்வூரில் மருந்துக்கடை நடத்திவந்தார். அவரது மறைவுக்கு பின் அவரின் மகன் விவேகானந்தன் அக்கடையை கவனித்துக்கொண்டார். இங்கிலீஸ் மருந்து கடைக்காரர் என்று அறியப்படுகிறது இந்த வீடு

மருந்துக்கடையுடன் விவேகானந்தன் பார்மசிஸ்ட் ஆக பணிபுரிந்தார். விவேகானந்தன், கிருட்டிணவேணி தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள். அதில் சசிகலா ஐந்தாவது பெண் குழந்தை.

மன்னார்குடி குடும்பம்

மன்னார்குடி குடும்பம்

பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950 இறுதியில் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தது.

விளார் நடராஜன்

விளார் நடராஜன்

1973ஆம் ஆண்டு விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார்.

ஜெயலலிதாவுடன் அறிமுகம்

ஜெயலலிதாவுடன் அறிமுகம்

நடராஜன் கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த போது அங்கு பொதுக்கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவிற்கு தனது மனைவி சசிகலாவை உதவியாளராக அனுப்பினார் நடராஜன். சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் இடையேயான அறிமுகம் இங்குதான் தொடங்கியது.

வீடியோ கேசட் விற்பனை

வீடியோ கேசட் விற்பனை

அப்போது ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். சசிகலா வீடியோ கவரேஜ் நிறுவனமொன்றை நடத்தி வந்தார். ஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா கொடுத்து வந்ததன் மூலம் இருவருக்கு நட்பு உருவானது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.

வேதா நிலையத்திற்கு இடப் பெயர்ச்சி

வேதா நிலையத்திற்கு இடப் பெயர்ச்சி

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டசபைக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டசபையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் வந்து தங்க ஆரம்பித்தார்.

குடும்பமே ஷிப்ட் ஆனது

குடும்பமே ஷிப்ட் ஆனது

1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அப்போது சசிகலாவுடன் அவரது உறவினர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகினர்.

உடன் பிறவா சகோதரி

உடன் பிறவா சகோதரி

எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என அறிவித்தார் ஜெயலலிதா. அதோடு 'சசிகலா எப்போதும் என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது' என வெளிப்படையாகவே அறிவித்தார் ஜெயலலிதா.

ஜெ.வால் விரட்டப்பட்டார்

ஜெ.வால் விரட்டப்பட்டார்

"அம்மா" என ஜெயலலிதாவுக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும், 'சின்னம்மா' சசிகலாவுக்கும் கிடைக்கத் துவங்கியது. 2011ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மன்னார்குடி குடும்பம் தனக்கு எதிராக சதி செய்வது தெரியவரவே போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டனர். சசிகலாவும் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார்.

எல்லாமே அக்காதான்

எல்லாமே அக்காதான்

இந்த பிரிவும் சில நாட்களே நீடித்தது. மீண்டும் தனக்கு பதவி ஆசை கிடையாது எல்லாமே அக்காதான் என்று எழுதிக் கொடுத்து விட்டு போயஸ் கார்டன் வந்தார் சசிகலா. சசிகலா இல்லாமல் ஜெயலலிதாவால் தனித்து இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சசிகலா ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார்.

சிறைக்கு

சிறைக்கு

2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல, அவருடன் சசிகலாவும் சென்றார். நெருக்கடியான காலகட்டங்களில், சிறையில், கணவரை கைது செய்து சிறையில் அடைத்தபோது, குடும்ப உறவுகளை எல்லாம் விலக்கி வைத்தபோது ஜெயலலிதாவுடனே இருந்தார் சசிகலா.

ஜெ.வின் கடைசிக் காலத்தில்

ஜெ.வின் கடைசிக் காலத்தில்

75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது அவரை கவனித்துக்கொண்டார் சசிகலா. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் இறுதிச்சடங்குகள் செய்து தான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லாமல் சொன்னார் சசிகலா. அதிமுகவில் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளராகியுள்ளார் சசிகலா.

English summary
Sasikala Natarajan is a friend former CM Jayalalithaa. She was born in Mannarkudi now She elect to ADMK General secretary. Sasikala Natarajan who consciously kept away from the meet has also remained quiet on her future role in the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X