வெளியே வரவே முடியாது, 4 வருஷமும் உள்ளேதான் இருக்கனும் சசிகலா.. கட்ஜூ
சசிகலாவின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜு தெரிவித்துள்ளார்.
திருச்சி: சசிகலா 4 வருடங்களும் சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
திருச்சி என்ஐடியில் 'வருங்கால இந்தியாவில் இளம் தொழில்முனைவோரின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ திருச்சி வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சசிகலாவின் தண்டனை குறித்தும் தற்போதைய தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் கூறியதாவது, தமிழக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப்பட்டேன்.

6 மாசம் அவகாசம் கொடுப்போம்
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களுடைய செயல்பாடு குறித்து விமர்சிக்க வேண்டும்.

சசி மேல்முறையீடு செய்யமுடியாது
சொத்து குவிப்பு வழக்கில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதியானது.

மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம்
ஆனால் மறுஆய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். பெரும்பாலான வழக்குகளில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளன.

சசியால் வெளியே வரமுடியாது
மறுஆய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. ஆகவே சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். வெளியே வர முடியாது.

ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லாமல் போய்விட்டது
தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடு சரியாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் தான் அவரால் ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications