துக்க வீட்டில் குதூகலமாக கை கோர்த்த தினகரன் - திவாகரன்! எடப்பாடி அரசுக்கு நெருங்கும் ஆபத்து!!
துக்க வீடு என்றும் பார்க்காமல் தினகரனும் திவாகரனும் குதூகலமாக கை கோர்த்திருப்பது எடப்பாடி அரசுக்கு ஆபத்து நெருங்கிவிட்டதையே சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
மன்னார்குடி: சசிகலாவின் அண்ணி சந்தானாலட்சுமி இறப்பு துக்க நிகழ்வில் எதிரும் புதிருமாக இருந்த தினகரன், திவாகரன் மிகவும் மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர். இவர்களது இந்த இணைப்பானது எடப்பாடி அரசுக்கு ஆபத்து வருகிறது என்பதையே வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
சசிகலா மற்றும் திவாகரனின் அண்ணி சந்தானலட்சுமி நேற்று காலமானார். சந்தானலட்சுமியின் மகள் அனுராதாவைத்தான் தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமியின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை யார் கைப்பற்றுவது என்கிற அதிகாரப் போட்டியில் ஒட்டுமொத்த சசிகலா குடும்பமே ஆளுக்கொரு திசையில் எதிரிகளைப் போல பிரிந்து நின்றது. சசிகலாவும் தினகரனும் சிறைக்குப் போன நிலையில் திவாகரனை உதறிவிட்டு எடப்பாடி தனி கோஷ்டியானார்.

ஒன் இந்தியா சொன்னது
அண்மையில்தான் சசிகலா கணவர் நடராஜன், திவாகரன், தினகரன் மூவரும் ராசியாகி எடப்பாடி அரசை தூக்கி எறிய வியூகம் வகுத்தனர். இதை கடந்த வாரமே நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் பதிவு செய்திருந்தது.

சந்தானலட்சு காலமானார்
இந்நிலையில் சசிகலா, திவாகரனின் அண்ணி சந்தானலட்சுமி நேற்று காலமானார். இந்த இறப்பு நிகழ்வுக்கு இன்று தினகரன், திவாகரன் ஆகியோர் வந்தனர். இவர்கள் டாக்டர் வெங்கடேஷூக்கு ஆறுதல் தெரிவிக்கும் போது மூவரும் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தனர். பின்னர் மூவர் கண்ணீர் சிந்தியதைப் பார்க்க முடிந்தது.

அரசியல் பேசிய திவாகரன், தினகரன்
துக்க வீடு என்றும் பார்க்காமல் தினகரனும் திவாகரனும் அரசியல் பேசவும் தயங்கவில்லை. அத்துடன் எடப்பாடி அரசு சிறப்பாக செயல்படுகிறது எனவும் போகிற போக்கில் சொன்னார் திவாகரன்.

எடப்பாடி அரசுக்கு ஆபத்து
அதிமுகவும் ஆட்சியும் எடப்பாடி மற்றும் கொங்கு அமைச்சர்கள் வசம் போய்விட்ட நிலையில் எப்படியும் இரண்டையும் மீட்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் கை கோர்த்துள்ளனர். ஆகையால் தினகரன் ஏற்கனவே ஆகஸ்ட் 5 வரை கெடு விதித்துள்ளார். இந்த கெடுவுக்கு பின்னர் அதிமுகவில் புத்ய பிரளயம் வெடிக்கலாம் என்றே தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications