எண்ணிப் பார்த்துட்டேன், சசிகலாவிடம் 89 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் - இளங்கோவன் தகவல்
சசிகலாவிடம் 89 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். நான் எண்ணிப் பார்த்து விட்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: சசிகலாவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் இருப்பவர்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர்தான் வருகின்றனர் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது:
சசிகலாவுடன் எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை நானும் பார்த்தேன். அதில் உள்ள எம்.எல்.ஏக்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர் வருகின்றனர். நீங்களும் எண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை விடுவிக்க முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்ய அவருக்கு உரிமை உண்டு. அவர் டிஜிபியுடன் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் உள்ளார். எனவே இதை அவரால் செய்ய முடியும். செய்ய வேண்டும்.
பாஜக கொல்லைப்புறமாக வந்தாலும் சரி, வாசல் படியாகவே வந்தாலும் சரி அல்லது பூமியைத் துளைத்துக் கொண்டு வந்தாலும் சரி ஒரு போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவே முடியாது என்று இளங்கோவன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications