For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா வசம் இருப்பது மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான்.. அதிலும் 30 பேர் அதிருப்தியில்?

சசிகலா வசம் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா வசம் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் 30 பேர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்கள் தங்களைத வீடு திரும்ப அனுமதிக்குமாறு சசிகலாவிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவின் கூவத்தூர் பயணம் பெரிய அளவில் வெற்றி இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று உள் நிலவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் எதிர்பார்த்தது போல சுமூகமான பயணமாக இது அமையவில்லை என்று கூறப்படுகிறது.

Sasikala group has only 95 MLAs?

சசிகலாவின் கூவத்தூர் பயணத்தின் உண்மை நிலவரம் குறித்து கீழ்க்கண்டவாறு தகவல்கள் கூறுகின்றன:

  • கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
  • இதில் 30 பேர் கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்
  • முதலில் தங்களை வீடு திரும்ப அனுமதிக்குமாறு அவர்கள் சசிகலாவிடம் வாதிட்டதாக தெரிகிறது.
  • இந்த 30 பேரையும் சமாதானப்படுத்த முடியாமல் சசிகலா திணறியதாக கூறப்படுகிறது.
  • 2 நாட்கள் மட்டும் காத்திருங்கள் என்று அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளாராம் சசிகலா.
  • 4 மணிக்குத் தொடங்கி 7 மணி வரை இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

பதவியேற்பு மேலும் தாமதமானால் ஆதரவு மேலும் குறையும் என்ற அபாய நிலையில் சசிகலா தரப்பு உள்ளதாம்.

English summary
Sources say that Sasikala group has only 95 MLAs in their kitty and 30 among them are up in the arms against Sasikala, it is said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X