தீர்ப்பு பாதகமாக வரும் என்பதால் தான் இரவே கூவத்தூரில் தங்கினாரா சசிகலா?
தீர்ப்பு பாதகமாக வரும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் சசிகலா நேற்று இரவே கூவத்தூரில் தங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தீர்ப்பு பாதகமாக வரும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் சசிகலா நேற்று இரவே கூவத்தூரில் தங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டால் எம்எல்ஏக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதாலேயே அவர் நேற்றிரவு கூவத்தூரில் தங்கினார் என கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களாக அவர்களை சந்தித்துவிட்டு சசிகலா போயஸ் கார்டன் திரும்பினார்.
ஆனால் தீர்ப்புக்கு முந்தைய நாளான நேற்று கூவத்தூர் சென்ற சசிகலா நேற்றிரவு அங்கேயே தங்கினார். இன்று உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக அறிவித்ததையடுத்து சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார்.

எம்எல்ஏக்களை சந்திக்க முடியாது
தீர்ப்பு தனக்கு எதிராக வந்தால் உடனடியாக சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். அதன் பின்னர் போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூர் சென்று சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசிக்க முடியாது.

நேற்றிரவு ரிசார்ட்டில் தங்கினார்
இதனை நேற்றே அறிந்த சசிகலா இரவே கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். ஆனால் எம்எல்ஏக்களுடன் தங்குவது போன்ற தோரணையை அவர் உருவாக்கியுள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் கூவத்தூர் ரிசார்ட்டில் அவர் ஆலோசனை நடத்தினார். இதில சட்டசபை தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக சரணடைய உத்தரவு
சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர்களை உடனடியாக சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications