பரோல் முடிவதற்கு 3 நாட்கள் முன்னதாக மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் சசிகலா
பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார்.
Recommended Video

தஞ்சை: பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா இன்று மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டுள்ளார்.
புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி சென்னையில் காலமானார்.
இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.

அரசியல் கட்சியினர்
தஞ்சை அருளானந்தநகரில் உள்ள கணவர் நடராஜன் வீட்டில் தங்கியுள்ளார். துக்கம் விசாரிப்பதற்காகவும், சசிகலாவை பார்த்து ஆறுதல் கூறுவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் அங்கு வந்து சென்றனர்.

படத்திறப்பு நிகழ்ச்சி
நேற்று காலை நடராஜனின் சொந்த ஊரான விளாரில் அவரது சகோதரர் குடும்பத்தினர் ஈமக்காரியங்கள் நடத்தினர். மேலும் தஞ்சையில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பரோல் முடிவதற்குள்
இந்நிலையில், சசிகலா இன்று தஞ்சையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு சிறைக்கு சென்றார். ஏப்ரல் 3ம் தேதி வரை அவருக்கு பரோல் இருந்தும் அவர் முன்னதாகவே புறப்பட்டார்.

குடும்பப்பிரச்சனை
தஞ்சையில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நாளும் குடும்பத்தினரின் சொத்து தகராறு தொடர்பான பஞ்சாயத்துக்களை தீர்த்து வைப்பதிலேயே சசிகலாவுக்கு நேரம் போய்விடுகிறது. குறிப்பாக தினகரன், விவேக் மோதல் அவரை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.

சாலை மார்க்கமாக
இதனால் சசிகலா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே தான் அவர் முன்னதாகவே பரப்பன அக்ரஹார சிறைக்கு என்றும் கூறப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து இன்று காலை சாலை மார்க்கமாக பெங்களூரு புறப்பட்ட அவர் இன்று மாலை 4 மணியளவில் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார்.












Click it and Unblock the Notifications