ஜெ. சமாதியில் கும்பிட்டு விட்டு பெங்களூர் சிறையை நோக்கிப் பயணிக்கிறார் சசி!
பெங்களூரு நீதிமன்றத்தில் சரணவடைத்தற்காக சசிகலா, இளவரசி, ஆகியோர் போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் போயஸ் தோட்டத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்டுள்ளனர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் நேராக பெங்களூரு செல்கிறார் சசிகலா.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதி செய்தவர்கள்; குற்றவாளிகள் என்பதை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் ஊழல் தொடர்பாகவும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் கூட்டு சதி குறித்தும் மிகக் கடுமையாக சாடியிருந்தனர். சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சசிகலா சரணடையவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றத்தில் இன்று கால அவகாசம் கோரினார் சசிகலா.அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார். எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் யாரும் வழியனுப்பாமேலேயே சசிகலா கிளம்பினார்.
பெங்களூரு செல்லும் முன்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஏராளமான நிர்வாகிகள் காத்திருந்து வழியனுப்பினர். அவருடன் தனி தனி வாகனங்களில் உறவினர்கள் புறப்பட்டனர். திவாகரனின் மகன் ஜெய ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய உறவினர்களும் உடன் செல்கின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications