என் மனைவி 'நாடகமாடுகிறார்'... எனக்கு எல்லாமே 'அம்மா'தான்: சசிகலா புஷ்பா கணவர் 'பொளேர்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை எதிர்த்து ராஜ்யசபாவில் பேசி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எம்பி சசிகலா புஷ்பா. ஆனால் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகரோ, என் மனைவி அரசியலுக்காக நாடகமாடுகிறார்; எனக்கு எல்லாமே 'அம்மா' (ஜெ)தான் என கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ராஜ்யசபாவிலும் டெல்லி செய்தியாளர்களிடம் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக; நாயைப் போல வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அதிரடியாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா புகார் கூறிய அதே நேரத்தில் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தமக்கான ஆதரவு வட்டத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் சசிகலா புஷ்பாவின் இந்த நடவடிக்கைகளை அவரது கணவர் லிங்கேஸ்வர திலகர் கடுமையாக எதிர்ப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sasikala Pushpa creating Drama, says Husband Lingeswara

அவற்றில் லிங்கேஸ்வரா திலகர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளதாவது:

  • சசிகலா புஷ்பாவின் விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.
  • அவர் அரசியலுக்காக இப்படியெல்லாம் செய்கிறார்... அனைத்துமே 'நாடகம்'
  • எனக்கு அம்மாதான் (ஜெயலலிதா) தெய்வம்... எனக்கு அரசியலில் எல்லாமே அம்மாதான்.
  • என் மனைவியின் நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை.
  • நான் எப்போதும் அம்மாவின் விசுவாசியாகவே இருப்பேன்.

இவ்வாறு லிங்கேஸ்வரா திலகர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+