திடீரென தனிக்கட்சி தொடங்கும் சசிகலா புஷ்பா! மார்ச் 26-ல் கட்சி பெயர் அறிவிப்பு!!
அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தனிக்கட்சியை தொடங்கவுள்ளார். வரும் 26-ந் தேதி புதிய கட்சியின் பெயரை சசிகலா புஷ்பா அறிவிக்க உள்ளார்.
தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்..பி. சசிகலா வரும் 26-ந் தேதியன்று புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்டவர் சசிகலா புஷ்பா. அதிமுக மகளிரணிச் செயலாளர், தூத்துக்குடி மேயர் என பல பொறுப்புகள் வகித்தவர்.
பின்னர் அதிமுக ராஜ்யசபா உறுப்பினராக கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்வானார். இந்நிலையில் திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெகுங்கி இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது ஜெயலலிதாவின் காதுகளை எட்டியது.

திருச்சி சிவாவுக்கு அறை
ஆனாலும் கட்சிக்கு அவர் ஆற்றிய பணிகளை கருத்தில் கொண்டு அவரை எச்சரி்த்து அனுப்பினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அறைந்தார்.

ராஜ்யசபாவில் புகார்
இது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா விசாரணை நடத்தியிருந்தார். பின்னர் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சசிக்கு எதிராக
தற்போது சசிகலாவுக்கு எதிராகவும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குரல் கொடுத்து வருகிறார். அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததற்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் சசிகலா புஷ்பா புகார் கொடுத்துள்ளார்.

தனிக்கட்சி
இந்த நிலையில் திடீரென புதிய கட்சியை சசிகலா புஷ்பா தொடங்க உள்ளார். வரும் 26-ம் தேதி புதிய கட்சிக்கான அறிவிப்பை சசிகலா புஷ்பா அறிவிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications