அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்ய எதிர்ப்பு- சசிகலா புஷ்பா வழக்கு!
அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்வதை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்வதை எதிர்த்து ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவின் சட்டவிதிகளின் படி 5 ஆண்டுகாலம் கட்சியின் உறுப்பினராக நீடிப்பவரே பொதுச்செயலராக முடியும். ஆனால் சசிகலா 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை கொடுத்தார். அப்போது சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் சசிகலாவை பொதுச்செயலராக்க வேண்டும் என்ற கோரிக்கை திணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 ஆண்டுகாலம் தொடர்ந்து உறுப்பினராக இல்லாத சசிகலா அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலராக முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications