சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக ஏற்ககூடாது.. தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா புஷ்பா கடிதம்
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் எம்பி சசிகலா புஷ்பா, இப்போது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முறையான வழி அல்ல என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா, நியாயமான மற்றும் நேர்மையான முறையில் பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்த உத்தவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சிகளின் அடிப்படை விதிகளின்படி, உறுப்பனர்கள் ஒன்று கூடி, வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், புற வழியில் கட்சியின் தலைமைக்கு வந்துள்ள சசிகலாவின் நியமனத்தை எந்தக் காரணம் கொண்டும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் சசிகலா புஷ்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை என்று குரல் எழுப்பிய சசிகலா புஷ்பா, துரோகி என்று பட்டம் சுட்டப்பட்டு ஜெயலலிதாவால் போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலாவை எப்படி அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்திற்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications