ஒரு பெண்ணிடம் இந்த மாதிரி கேக்குறீங்களே.. எந்த மீடியாங்க நீங்க? நிருபரிடம் சீறிய சசிகலா புஷ்பா
நெல்லை: நிருபர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்த ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, ஒரு பெண்ணிடம் இப்படி கேட்கக்கூடாது என கடிந்து கொண்டார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பரபரப்பாக பேசினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அழுதார்.
இதன்பிறகு வெளியே, நிருபர்களிடம் பேசும்போது, தனது பதவியை பறித்து வேறு யாருக்கோ தர ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும், எனவே வேண்டுமென்றே வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்பி அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
சம்மந்தம் இல்லை
திருச்சி சிவாவை தான், அடித்ததற்கும், தன்னை பதவியை ராஜினாமா செய்ய சொல்வதற்கும் எந்த காரணமும் கிடையாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

திட்டமிட்ட வேலை
திருச்சி சிவா விவகாரத்தை தனது ராஜினாமா நாடகத்திற்கு அதிமுக தலைமை பயன்படுத்திக்கொண்டதாகவும், இது திட்டமிட்ட காய் நகர்த்தல் எனவும் அவர் கூறினார்.

நிருபர் கேள்வி
அப்போது ஒரு நிருபர், நீங்கள் மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஜெயலலிதா உங்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார்.

சரியான கேள்வி தேவை
இந்த கேள்வியால் சசிகலா புஷ்பா ஆத்திரமடைந்தார். சரியான கேள்வியை என்னிடம் கேளுங்கள். இதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது.

எந்த மீடியா நீங்க
நான் ஒரு பெண்மணி. என்னிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டுமோ அப்படித்தான் கேட்க வேண்டும் என்று புஷ்பா கூறியதோடு, யாரு இவர், எந்த மீடியா என கேள்வி கேட்க ஆரம்பித்தார். அப்போது உடனிருந்த சீனியர் நிருபர்கள், "விடுப்பா, பர்சனல் கேள்வியெல்லாம் வேண்டாம்.." என கூறி அடுத்த கேள்விக்கு நகர்ந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications