தனிக்கட்சிக்கு முன்னோட்டம் பார்க்கும் சசிகலா கோஷ்டி! உதயமானது டிடிவி பேரவை!!
தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக சசிகலா கோஷ்டியினர் டிடிவி பேரவை என்ற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: தனிக்கட்சியை தொடங்குவதற்கு முன்னோட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக டிடிவி பேரவை உதயமாகியுள்ளது.
அதிமுகவை கைப்பற்ற துடித்த சசிகலா கோஷ்டிக்கு சிறைவாசங்களே பரிசாக கிடைத்தன. இப்போது சசிகலா அண்ட் கோவை ஒரு எம்.எல்.ஏ. கூட ஆதரிக்காத நிலைதான் இருக்கிறது.

தனிக்கட்சி ஆலோசனை
இதில் ரொம்பவே நொந்துபோய் விரக்தியில் இருக்கிறது சசி அண்ட் கோ. டெல்லியின் நெருக்கடியும் அடுத்தடுத்து தீவிரமாகும் நிலையில் இதில் இருந்து தப்பிக்க தனிக் கட்சியை தொடங்கலாம் என தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள் சசிகலா உறவினர்கள்.

பாமக பாணியில்...
தனிக்கட்சியைத் தொடங்கி பாமக பாணியில் அரசியல் செய்யலாம். 2019 லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதுதான் சசிகலா உறவினர்களின் தீவிர ஆலோசனையாக இருக்கிறதாம்.

டிடிவி பேரவை
இதன் முதல் கட்டமாக தினகரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், மன்னார்குடி பகுதிகளில் டிடிவி பேரவையின் பெயரில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எங்களால் முடியாதா?
தஞ்சாவூர், மன்னார்குடி பகுதிகளில் தனிக்கட்சி குறித்து ஜாதி ரீதியாகவும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சசிகலா உறவினர்கள், பணம்தான் கொட்டி கிடக்கிறதே.. ஒரு கட்சியை ஜாதிகாரர்களை வைத்து நடத்த முடியாமல் போகும்.. அதிமுகவுக்கே குறிவைத்தோம்.. அது தப்பிவிட்டது. எங்களை மீறி இந்த பகுதியில் யாரும் நுழைய முடியாத நிலையை உருவாக்குவோம் என்கின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications