3 அணிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்.. நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.. சசிகலா சூசகம்
திருவாரூர் : நாடாளுமன்றத் தேர்தலின் போது 3 அணிகளும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம், நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் - பிரபா தம்பதியரின் மகன் திருமண விழாவில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா இன்று கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், "இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 வருடங்களில் இந்த பெருமைமிகு கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர். இதனை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
எதிர்க்கட்சிகள் இதனை இந்தியாவின் பெருமை என நினைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவே புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "மாற்றத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பார்க்க முடியும். ஒரு கட்சியில் தொண்டர்களின் விருப்பம் தான் எப்போதும் வெற்றி பெரும். அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
கட்சித் தொண்டர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு இரண்டும் இருந்தால் தான் அரசியலில் தலைமைப் பதவிக்கு வரமுடியும். வரும் காலத்தில் தேர்தல்களின்போது அதனைப் பார்க்கலாம்.

ஓபிஎஸ்ஸை சந்திப்பதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை. எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து கொண்டு செல்வதுதான் என்னுடைய வேலை. இதை நான் ஜெயலலிதா - ஜானகி பிளவு ஏற்பட்டபோது கூடச் செய்திருக்கிறேன். நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய மரண நிகழ்வுகளை பார்த்திருக்க முடியாது. தமிழ்நாட்டை அதிமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம்" எனத் தெரிவித்தார்.
-
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications