அப்பாடா..தலைவலியில கொஞ்சம் போச்சு..அமலாக்கப் பிரிவு வழக்குகளில் இருந்து சசிகலா, தினகரன் விடுவிப்பு
சென்னை: அந்நிய செலவாணி மோசடிதொடர்பாக அமலாக்கப்பிரிவுதொடர்ந்த வழக்குகள்சிலவற்றிலிருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை சென்னைபொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

சென்னை அமலாக்கப்பிரிவு, கடந்த 1997ஆம் ஆண்டு சசிகலா, தினகரன் ஆகியஇருவர் மீதும்அந்நிய செலவாணி மோசடி வழக்குதொடர்ந்தது. மொத்தம் 7 வழக்குகள் அவர்கள் இருவர்மீதும் பதிவுசெய்யப்பட்டது.
தனியார் தொலைக்காட்சிக்கு ட்ராண்ஸ்பாண்டர்கள் வாங்கியது தொடர்பாகவும், ஆவணம் இன்றி பணப் பரிமாற்றம்செய்ததாகவும் சசிகலா மீதும், தினகரன் மீதும்அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டி இருந்தது.
இந்த 7 வழக்குகளில் 5 வழக்குகள் சென்னை எழும்பூரில்உள்ள முதலாவதுபொருளாதார குற்றவியல்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மீதமுள்ள2 வழக்குகள் எழும்பூரில் உள்ள 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது.
இந்த 7 வழக்குகளையும் நீதிபதிதட்சிணாமூர்த்தி விசாரித்து வந்தார். இந்த நிலையில் முதலாவதுபொருளாதார குற்றவியல்நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில் இருந்துதன்னை விடுவிக்கவேண்டும் என்றுசசிகலா மனுதாக்கல் செய்திருந்தார்.
2 வது நீதிமன்றத்தில் உள்ள2 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்என்று தினகரன்மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள்மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது ஒரு வழக்கில்இருந்து சசிகலாவையும், 2 வழக்குகளில் இருந்து தினகரனையும் விடுவித்து நீதிபதிதட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். -












Click it and Unblock the Notifications