சிறையைவிட்டு வெளியே வந்து ஓய்வெடுக்க பலே நாடகத்தை கையிலெடுக்கும் சசி!
பெங்களூரு சிறைவாசத்தை அனுபவிக்க முடியாமல் தத்தளிக்கும் சசிகலா பலே நாடகம் ஒன்றை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளாராம்.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா உடல்நிலை சரியில்லை என நாடகமாடி பெங்களூரு மருத்துவமனையில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலர், முதல்வர் பதவியை சசிகலா நெருங்க நெருங்க... சின்னம்மா சின்னம்மா என்ற சரணகோஷம் உச்சஸ்தாயில் இருந்தது. ஆனால் பெங்களுரு சிறைக்குள் சசிகலா அடைக்கப்பட்டதுதான் தாமதம்..
சின்னம்மாவை தூக்கி எறிந்துவிட்டு 'மக்களின் செல்வர்' என ஃபெரா குற்றவாளி டிடிவி தினகரனுக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறது அடிமைகள் கூட்டம். ஆர்கே நகர் இடைத் தேர்தலில் ஒரு கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் படத்தைக் கூட பயன்படுத்த முடியாத அச்சத்தில் இருக்கிறது டிடிவி தினகரன் தரப்பு.

மிதப்பில் தினகரன்
அத்துடன் கட்சியிலும் ஆட்சியிலும் தாமே என்கிற நிலைக்கு வந்துவிட்டாராம் தினகரன். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வென்றால் முதல்வர் பதவிதான் என மிதப்பில் இருக்கிறாராம் தினகரன்.

நாடகமாட முடிவு
இதனால் ரொம்பவே வெறுத்துப் போன சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமக்கு உடல்நிலை சரியில்லை என நாடகமாடி 15 நாட்கள் பெங்களூரு மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

விரைவில் அரங்கேற்றம்
இதற்காக தமது வழக்கறிஞர்கள் மூலம் தீவிரமான முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறாராம். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிந்த பின்னர் இந்த உடல்நிலை சரியில்லை நாடகம் அரங்கேறப் போகிறதாம்.

இளவரசி அப்செட்
அதே நேரத்தில் சசிகலாவைப் போல தம்மையும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் இளவரசி. ஆனால் வழக்கறிஞர்களோ, இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கேட்டால் அனுமதி கிடைக்காது; கொஞ்சம் பொறுத்திருங்கள் என கூறிவிட்டனராம். இதனால் ரொம்பவே நொந்து போயுள்ளாராம் இளவரசி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications